2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்

2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விருதுகளை வழங்கினார்.

Update: 2024-03-07 02:00 GMT

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்தவகை யில் 2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இறுதிச்சுற்று, தனிஒருவன், 36 வயதினிலே ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளன.

இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி என் ராஜரத்தினம் கலை அரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் விழாவிற்கு தலைமை ஏற்று விருந்தினர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசு, ஊக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார், உடன் அமைச்சர் மா சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News