சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு அஞ்சுகிறது- அன்புமணி ராமதாஸ்

Update: 2023-12-10 02:50 GMT

அன்புமணி ராமதாஸ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 மதுரை தெப்பக்குளம் பகுதியில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கம் பாமக சார்பில் நடைபெற்றுவருகிறது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்துஅவர் செய்தியாளர்களிடம் பேசிய போது , சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசிற்கு அனைத்து உரிமைகளும், சட்டங்களும் இருக்கிறது என பிரபல சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள், ஆனால் எங்களுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்கு தான் அதிகாரம் இருக்கிறது என தவறான கருத்தை முதலமைச்சரே தெரிவிக்கிறார்.

அப்படி என்றால் எப்படி பீகாரில் நடத்தினார்கள், பிகாரில் கணக்கெடுப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தும் நீதிமன்றத்தில் எந்த தடையும் கொடுக்கவில்லை பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சட்டப்பேரவையில் வெளியிட்டார்கள், பீகாரை தொடர்ந்து ஆந்திரா, ஒடிசாவும் சாதி வாரி கணக்கெடுப்பு முன்னெடுப்பை தொடங்கியுள்ளனர் ஆனால் சமூகநீதி பேசும் முதலமைச்சர் தயங்குவது ஏன்? என்ன காரணம்? ஏன் அச்சம் சாதிகளுக்ககாக உரிமைகளை சமூக நீதிகளை பெறும் கட்சிகளாக இயக்கங்களாக செயல்பட வேண்டும்.

சமூகநீதியின் அடித்தளமே சாதிவாரி கணக்கெடுப்பு தான் 44 ஆண்டுகளுக்கு முன்பே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார், சாதி என்றாலே கெட்ட வார்த்தை என்பது போல என இருக்கிறார்கள். சாதியை வைத்து அரசியல் நடத்துகிறார்கள். சாதி்வாரியாக பெரும்பான்மை அடிப்படையில் தான் திமுக பதவி கொடுக்கிறார்கள் ;ஆனால் வெளியில் சாதி மதம் இல்லை என்கிறார்கள் வாக்குவங்கிக்ககாக இப்படி நடந்துகொள்கிறார்கள், சமூகநீதி என்பது பின்தங்கிய சமுதாயத்தை உயர்த்துவது தான் மத, மொழி ரீதியாக இட ஒதுக்கீடு இல்லை ஆனால் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் தயக்கம்? என கேள்வி சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்தி பின் தங்கியவர்களுக்கு உதவி செய்வது தான் சமூக நீதி, CENSUS என்பது SURVEY என்பது வேறு என்பது கூட தெரியாமல் இருக்கிறது தமிழக அரசு.

சர்வே என்பது மத்திய அரசும், மாநில அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் எடுக்கின்றனர்., தமிழ்நாடு முன்னேற்றமடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் தான்.  6 முறை ஆங்கிலேயர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தார்கள்., ஆங்கிலேயருக்கு புரிந்தது ஆனால் இப்போதைய திமுக அரசுக்கு புரியவில்லை, திமுக அரசு தூங்குவது போல நடிக்கிறது இந்தியாவிலயே முதன்முறையாக இட ஒதுக்கீடு கொண்டுவந்த மாநிலம் தமிழகம் தான். பல்வேறு வரலாறுகள் உள்ள திமுக அரசு சமூகநீதியை நிலை நாட்ட பயந்துகொண்டு இருக்கிறது.சமூகநீதி மாநாடு, சமூகநீதி கூட்டம் கருத்தரங்கள் எல்லாம் வீண்தான் நாங்களும் முன்னேறனும் எவ்வளவு நாள் தான் அடிமையாக இருப்போம், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் 62% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள். இந்த இட ஒதுக்கீட்டை அறிவித்து 9ஆவது அட்டவணையில் இடம்பெறவைத்தவர் மறைந்த முதலமைச்சர் அம்மா இதனை அவர்கள் செய்யவில்லை என்றால் ரத்து ஆகியிருக்கும்.

ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள், மோசமா போச்சு நாசமா போச்சு என்று சொல்லும் வகையில் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கடந்த 3 ஆண்டுகளாக கஞ்சா விற்பனை அதிகரிப்பு அதிகாரம் மட்டும் என்னிடம் இருந்தால் ஒரு மாதத்தில் அனைத்தையும் கட்டுப்படுத்திவிடுவேன், கஞ்சா விற்பனை காவல்துறையினருக்கு தெரியாமல் நடக்காது., இது தொடர்பாக காவல்நிலையங்களில் காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்தால் எல்லாம் சரியாகும், அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என துடித்துக்கொண்டு இருக்கிறோம், நாம் அதிகாரத்துக்கு வந்தால் ஒரே நாளில் மது ஒழிப்பு கொண்டுவருவோம், மது ஒழிப்பு கொண்டுவர அதுக்கு மனம் வேண்டும், தைரியம் வேண்டும் சமூகநீதி காக்க வேண்டிய தமிழகத்தை சாதாரணமாக உருவாக்கலாம் எனவும், சென்னையில் இன்றும் போட் சர்வீஸ்தான் குடிநீர், பால், மின்சாரம் இல்லை, இன்னும் ஒருவாரம் ஆனால் காய்ச்சல் தொற்று வர தொடங்கும் 2015 ஆம் ஆண்டே இது போன்ற பெருவெள்ளம் வரும் என்று சொன்னேன் வந்துவிட்டது.

இந்த வெள்ளத்தால் பணக்காரர்கள் இழப்பதை பற்றி கவலை இல்லை ஆனால் ஏழை எளிய மக்கள் பொருட்களின் சேதம் இழப்பு ஈடு செய்ய இயலாதது, இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளத்தையே மறந்துவிடுவார்கள் ஏனென்றால் சினிமாவும், IPLலும் வந்துவிடும் மன்னர்கள் காலத்தில் பிரச்சனைகளை மறக்க குடிகூத்து என இருப்பார்கள் அது போல தற்போதும் உள்ளது.  தமிழக அரசு உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றார்.

Tags:    

Similar News