மத்திய அரசு அனுமதி மறுத்தால் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். - வேல்முருகன் .

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என்றால் பீகார், ஒரிசா போன்ற மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தது போல தமிழ்நாடு அரசும் எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார்.

Update: 2024-06-27 07:18 GMT

வேல்முருகன் எம்.எல்.ஏ  

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மிக முக்கிய கோரிக்கையை மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறது. சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து அனைத்து சமூகத்தினருக்கும் கல்வி பொருளாதாரத்தில் சம உரிமை கிடைக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தோம். தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசின்  தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து சமூகத்தினருக்கும் சம வேலை வாய்ப்பு கல்வி பொருளாதாரம் கிடைக்க ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இந்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் பொழுதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசு சமூக நீதிக்கு எதிரானது இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம், முல்லை பெரியாருக்கு எதிரான தீர்மானம் நீட்டுக்கு எதிரான தீர்மானம் அனைத்தையும் குப்பை தொட்டியில் வீசும் ஒன்றிய அரசிடம் இந்த தீர்மானத்தை அனுப்பி வைத்தால் இதையும் குப்பை தொட்டிக்கு தான் அனுப்புவார்கள்.

ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடிதம் எழுதியதற்கும் பதில் இல்லை. மத்திய அரசு சமூக நீதிக் கோட்பாட்டுக்கு எதிரானவை. அவர்களிடத்தில் சமூகநீதியை எதிர்பார்க்க முடியாது அதனால் அந்த சட்ட திருத்தத்தில் ஒன்றி அரசு இந்த சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்பதை சேர்த்து ஏழு கோடி மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த இந்த அரசினர் தீர்மானத்தை நடத்தவில்லை என்றால் தமிழ்நாடு அரசு இந்த சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கும் என்பதை மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று திருத்தம் மேற்கொள்ள முதலமைச்சரை அறையில் சந்தித்து சொன்னேன்.

ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம் கண்டிப்பாக எதிர்வரும் காலங்களில் உங்கள் கோரிக்கையை பரிசிலிக்கிறேன் என்று நேர் மறையான பதிலை முதல்வர் அளித்து இருக்கிறார். சமூக நீதிக்கு போராடிய 21 போராளிகளில் 9 பேர் வாழ்ந்த இடம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என்றால் பீகார், ஒரிசா போன்ற மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தது போல தமிழ்நாடு அரசும் எடுக்க வேண்டும். பீகார் மாநில உயர்நீதிமன்றம் அந்த சாதி வாரி கணக்கெடுப்பை தடை விதிக்கவில்லை. இந்தியாவில் எங்கும் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று தடை இல்லை. 10.5% இட ஒதுக்கீடு கேட்கும் வன்னியர்கள் மத்த சமூகத்தினரை விட வேலை வாய்ப்பில் , கல்வியில் என எந்த விதத்தில் பின்தங்கி உள்ளார்கள் என்ற தரவுகளை தான் உச்சநீதிமன்றம் கொண்டு வரச் சொல்லி உள்ளது. குழப்பத்தை தெளிவு செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. என்றார்.

Tags:    

Similar News