ஊட்டி வந்தார் ஆளுநர்

ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று ஊட்டி வந்தார்.

Update: 2024-03-31 01:42 GMT

ஆளுநர் ஆர்.என் ரவி 

நேற்று  சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பி 2.45 மணியளவில் கோவை வந்தார். சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி வழியாக மாலை 6 மணி அளவில் ஊட்டி ராஜ்பவன் மாளிகை வந்தடைந்தார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் கவுசிக், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி ஆகியோர் உடன் இருந்தனர்.

இன்று ( ஞாயிற்றுக்கிழமை) முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் செல்கிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். அடுத்தநாள் (செவ்வாய்க்கிழமை) குன்னூரில் உள்ள தனியார் உணவகம் செல்கிறார். 3ம் தேதி குந்தா பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து 4ம் தேதி காலை 11 மணியளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் பயணத்தை ஒட்டி நீலகிரி காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவில் உத்தரவின் பேரில் போலீஸார், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags:    

Similar News