தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா நெல்லை கொள்முதல் செய்ய 60 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு

Update: 2024-01-22 12:55 GMT


மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா நெல்லை கொள்முதல் செய்ய 60 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு


மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 1,70,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா, தாளடி பயிரிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வரும் வேலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மாவட்டத்தில் முதற்கட்டமாக 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டு . மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார். பூம்புகார்எம்எல்ஏ நிவேதாமுருகன் மற்றும் பலர்கலந்துகொண்டனர். கடந்த ஆண்டு 122 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 60 கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
Tags:    

Similar News