இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த அமைதிப் பூங்கா! - அமைச்சர் ரகுபதி பேட்டி

Update: 2024-07-29 07:30 GMT

அமைச்சர் ரகுபதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகம் கொலை மாநிலமாக மாறி வருவதாக ஈபிஎஸ் குற்றம்சாட்டிய நிலையில் அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “பழிவாங்கும் போக்கிலான முன்விரோத கொலைகள் தான் தமிழகத்தில் நடக்கின்றன. மற்றபடி வன்முறைச் சம்பவங்கள் நடக்கவில்லை. புதுச்சேரியில் நிகழ்ந்த படுகொலைகளைகூட தமிழகத்தில் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே தமிழகம் சிறப்பாக விளங்குகிறது. வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை, குற்றச் சம்பவங்களுக்கும் முன்விரோதமே காரணம்.

Advertisement

பழிவாங்கும் செயல்கள் தான் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. இதனை தடுப்பதற்கு அரசு நிறைய முயற்சிகள் எடுத்துள்ளது. முன்னாள் குற்றவாளிகளை அரசு அடையாளம் கண்டு கட்டுப்படுத்துகிறது. ஆனால் புதிது புதிதாக குற்றவாளிகள் வருகிறார்கள். அவர்களை என்ன செய்வது?. அரசு தொடர்ந்து கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அச்சுறுத்தல் இருப்பதாக அரசியல் தலைவர்கள் சொன்னால் அரசு பாதுகாப்பு கொடுக்க தயாராக உள்ளது. ஆனால் யாரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News