தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வு

ராணிப்பேட்டையில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2024-03-06 01:20 GMT

தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவின் 2023 - 24 ஆண்டின் ஆய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழி குழுவின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் முன்பு பொது மக்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அந்தந்த அரசு அலுவலர்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு மனுவின் மீது தீர்வுகாண நடவடிக்கை செய்யப்பட்டது.

Advertisement

அதன்படி கூட்டத்தில் வரப்பெற்ற 113 மனுக்களுக்கு ஒருசில மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. முன்னதாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான 11 குழு உறுப்பினர்களை கொண்ட அரசு உறுதிமொழி குழு ஆய்வு பயணம் மேற்கொண்டனர். அதில் புதியதாக கட்டப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஆய்வு செய்தனர். அப்போது காவல்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6 கோடியை 91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்தை வாரம் திறக்கப்பட்ட சுற்றுலா மாளிகையை ஆய்வு செய்து தரமான பொருட்களை கொண்டு கட்டப்பட்டதா என ஆய்வு செய்தனர். குறிப்பாக மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆய்வு குழு உள் நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை வழங்கப்படுகிறதா எனவும், அதிக நோயாளிகள் வேலூர் தலைமை மருத்துவமனைக்கு அதிகம் அனுப்பி விடுவதாக குற்றசாட்டு எழுந்தது. இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு குழு தலைவர் தெரிவித்தார்.

தொடர்ந்து வாலாஜாவில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி சோளிங்கர், திமிரி, காவனூர் என 10 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகன், கள பயணத்தில் பத்து இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் அனைத்தும் சிறப்பாக மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது என்றும் அதேபோல் ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் 1410 தொழிற்சாலைகள் உள்ளது இதில் இருந்து வெளியேறக் கூடி கழிவுகள் நீர், காற்று, நிலம் மாசுபாடத வகையில் இருக்க வேண்டும் என சுற்று சூழல் அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பரிந்துரை செய்யப்படுவதாக தெரிவித்தார். இந்த ஆய்வில் சட்டமன்ற குழு, மாவட்ட ஆட்சியர் வளர்மதி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News