தமிழக வெற்றி கழகம்: அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-02 13:18 GMT
அறிக்கை வெளியிட்ட விஜய்
தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். புதியதாக தொடங்கியுள்ள இந்த கட்சிக்கு நடிகர் விஜய் தலைவராகவும், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிறத நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவில்லை என்பதையும் நடிகர் விஜய் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் காணும் என்பதையும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வரும் காலங்களில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்