தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்
Update: 2024-07-25 06:15 GMT
காவிரி விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்துப் பேச இருக்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், கர்நாடகா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட நிலையில் கர்நாடக அரசு உரிய அளவில் தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தினால் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு நியமிக்கப்பட்டது, ஆனால் அந்த ஆணையம் சொல்லியும் கர்நாடக அரசு கேட்கவில்லை.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கு 45 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என நீர்வளத்துறை செயலாளர் மணிவாசகம் வலியுறுத்தினார். இந்நிலையில், இந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக டெல்லி சென்றுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.