தொகுதி பங்கீடு குறித்து பேச தமிழ் மாநில காங்கிரஸ் குழு அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-08 02:44 GMT

தொகுதிபங்கீட்டு குழு அமைப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.வெங்கடேஷன் தலைமையில் தொகுதி பங்கீடு குறித்து பேச பேச்சு வார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது.

இந்த நிலையில் பாஜக உடனான தொகுதி பங்கிட்டு குறித்து பேசுவதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுச்செயலாளர் சக்தி வடிவேல், விடியல் எஸ் சேகர், முனவர் பாட்ஷா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராம் பிரபு, என்.ஆர். ரெங்கராஜன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News