வேளச்சேரி மேற்கு பகுதியில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்

வேளச்சேரி மேற்கு பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரித்தார்.;

Update: 2024-04-05 11:37 GMT

வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை, வேளச்சேரி மேற்கு பகுதியில் 176-வது வட்டம், 100 அடி சாலை பகுதியில் 11-வது நாளாக திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பொது மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பை அமைச்சர் மா.சுப்பிரணியன்,வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.வி. ஆசான் மௌலானா ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார். வா

க்கு சேகரிப்பு 176 வது வட்டம் - 100 அடி பைபாஸ் சாலையில் தொடங்கி, பாலாஜி காலனி, அஷ்டலட்சுமி நகர், பவானி அம்மன் கோயில் தெரு, சசி நகர், ராமகிருஷ்ணா நகர், இ.பி காலனி, நாகமுத்து மாரியம்மன் கோவில் தெரு, வேல் நகர் பிரதான சாலை தொடர்ந்து,, ராஜீவ் நகர் அம்மன் கோவில் தெரு, கங்கை நகர், லட்சுமி நகர், ராஜீவ் நகர் விக்னேஷ் சாலை, நேதாஜி காலனி நான்காவது தெரு, கிருஷ்ணராஜா நகர், ஆண்டாள் நகர், ஏ.ஜி.எஸ் காலனி நான்காவது பிரதான சாலை மேலும்,, எம்.ஜி.ஆர். நகர்,

Advertisement

வடுவம்பாள் நகர் ,வெங்கடேஸ்வரா நகர், சக்தி பௌனம்மாள் தெரு, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு, வ.உ.சி. தெரு, பத்மாவதி நகர் , சங்கர் நகர் , மேலும் குபேரன் நகர் வழியாக வந்து கங்கை அம்மன் கோவில் தெருவில் நிறைவு பெறுகிறது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று தனது அரசியல் கொடிகளை கட்டிக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News