விருகம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழச்சி தங்கபாண்டியன் !
விருகம்பாக்கம் பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் 127-வது வட்டத்தில், 16-வது நாளாக திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பொது மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த 16-வது நாள் வாக்கு சேகரிப்பை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா, 127-வது வட்டத்தின் கவுன்சிலர் பொன்லோகு ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தனர்.
வாக்கு சேகரிப்பு 127-வது வட்டம் - கங்கை அம்மன் கோவில் தெருவில் தொடங்கி, கோயம்பேடு காய்கறி சந்தை, குறுங்காலீஸ்வரர் கோவில், சீதாராமன் தெரு வழியாக வந்து காந்தி சாலையில் நிறைவு பெறுகிறது இந்தப் 16-வது நாள் வாக்கு சேகரிப்பு காலை 8.00 மணிக்கு தொடங்கி மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.
இன்று மட்டும் மொத்தம் 25 இடங்களுக்கு சென்று வாக்கு சேகரிக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன். விருகம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க வரும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, திமுக நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து, வழி நெடுகிலும் மலர் தூவி, ஆரத்தி எடுத்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.