திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழச்சி தங்கபாண்டியன்
விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து தமிழச்சி தங்கபாண்டியன் நன்றி தெரிவித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 16:30 GMT
தலைவர் திருமாவளவன்
தென்சென்னை தொகுதியின் திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் விசிக அலுவலகம் வருகை தந்தார். விசிக ஆற்றிய தேர்தல் பணிகளுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் நன்றி தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திருமாவளவன் தமிழச்சி தங்க பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்..