துணை ஜனாதிபதி கனவு காண்கிறார் தமிழிசை - அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழிசை விஷயம் தெரியாமல் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தல் களத்தில் இறங்குகிறார். தேர்தலில் ஏதாவது ஆகிவிட்டால் துணை ஜனாதிபதி பதவி தருவார்கள் என அவர் நினைக்கலாம். ஆனால் அடுத்து அமையப்போவது இந்தியா கூட்டணி ஆட்சி தான் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2024-03-19 08:04 GMT
சாமித்தோப்பு தலைமை பதியில் பாரம்பரிய உடையணிந்து பேட்டியளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று சுவாமி தோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமை பதியில்  தரிசனம் செய்ய வந்தார். பாரம்பரிய உடையணிந்து வந்த அமைச்சரை முன்னதாக அவரை தலைமைப் பதி குருமார்கள் வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-     இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கவும், தூத்துக்குடியில் கனிமொழி எம்பி-யை  எதிர்த்து போட்டியிடும் நபர்கள் டெபாசிட் இழக்க வேண்டியும் தரிசனம் செய்தேன்.  தமிழிசை சௌந்தரராஜன் கவர்னர் பதிவியை ராஜினாமா செய்வது அவரவர் தலையெழுத்து. தூத்துக்குடி தொகுதியில் அவர் போட்டியிட்டால்?  அது அவர்களுக்கே தெரியும்.தமிழிசை விஷயம் தெரியாமல் களத்தில் இறங்குகிறார். தேர்தலில் ஏதாவது ஆகிவிட்டால் துணை ஜனாதிபதி பதவி தருவார்கள் என அவர் நினைக்கலாம். ஆனால் அடுத்து அமையப்போவது இந்தியா கூட்டணி ஆட்சி.  இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் மற்றும் பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News