உரிய சான்றிதழ்களுடன் தமிழக மாடுகள் கொண்டு செல்லப்படுகிறதா?
தமிழகத்தில் இருந்து மாடுகள் உரிய சான்றிதழ்களுடன் தான் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சரிபார்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2024-04-10 02:27 GMT
விலங்கு நல வாரிய அனுமதி சான்றிதழ் இல்லாமல் மாடுகளை அண்டை மாநிலம் எடுத்து செல்வதை தடுக்கக் கோரி யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வது தொடர்பாக 2007 ஆம் ஆண்டு டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.