தமிழ்நாட்டில் 53% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை: வானிலை மையம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 53% கூடுதலாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-26 12:25 GMT

Delhi Rain

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையினால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 53% கூடுதலாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 01.10.2024 முதல் 26.10.2024 வரை 208.3 (மி மீ) மழைப் பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 136.5 (மி மீ) தான் பெய்யும். ஆகவே தற்போது வரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 53% அதிகமாக பெய்துள்ளது. மேலும், சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பை விட 76% கூடுதலாக பெய்துள்ளது. 

Tags:    

Similar News