மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத்திறன் பயிற்சி

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என பள்ளிக் கல்வித் துறையின் புதிய அறிவிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிதுள்ளார்.

Update: 2024-06-24 14:08 GMT

செயற்கை நுண்ணறிவு 

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என பள்ளிக் கல்வித் துறையின் புதிய அறிவிப்பில் அமைச்சர் அறிவித்தார்.

வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்வதற்காகவும் அவர்களது கணினி வழி கற்றலை மேம்படுத்தவும், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு கணினி சார் அடிப்படை அறிவியலையும் செயற்கை நுண்ணறிவு திறன் மற்றும் அதனை பயன்படுத்தும் நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் விதமாக பாடத்திட்டம் தயார் செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சியும் மாணவர்களுக்கு மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அடிப்படை திறன்களும் கற்றுக் கொடுக்கப்படும்.

Tags:    

Similar News