ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தகுதி உள்ள பகுதிநேர ஆசிரியர்களை, அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
Update: 2023-12-09 09:26 GMT
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தகுதி உள்ள பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் T. கோமதுரை மற்றும் மாவட்டச் செயலாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக முழுவதும் வந்திருந்த தகுதி உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.