அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி!
திமிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King News 24x7
Update: 2024-03-31 15:22 GMT
வாகனம் மோதி வாலிபர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே உள்ள மொரப்பந்தாங்கல் கிராமம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சதீஷ் (25). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் கோபி (25).இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு நோக்கி சென்றனர். பரதராமி அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் காயம் கோபி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவலறிந்ததும் திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்,இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.