மார்ச் 4ம் தேதி வரை இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 4ம் தேதி வரை இயல்பை விட வெப்பநிலை 3 சதவீதம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-03-02 14:47 GMT

பைல் போட்டோ 

தமிழகத்தில் கோடை தாக்கம் தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று முதல் மார்ச் 4ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை, மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News