அதிமுக உறுப்பினர்கள் தற்காலிக இடைநீக்கம்: அப்பாவு

பேரவை செயல்பாடுகளை தொடர்ந்து தடுக்கும் அதிமுக உறுப்பினர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-06-27 00:40 GMT

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்காவது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்து சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பேரவைக்குள் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவை தலைவர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

பின்னர் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, எதிர்கட்சி தலைவர் சபை ஆரம்பித்த நாள் முதல் கள்ளக்குறிச்சி மரணம் குறித்தி விவாதிக்க வேண்டும் என சொன்னார். இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது. உள்நோக்கத்தோடு அதிமுக செயல்படுகிறது. ஒத்தி வைப்பு தீர்மானத்தை நான் ஏற்றுக்கொண்டால் கூட அதிமுக பேச தயாராக இல்லை. விதி 65(4)ஒரு பொருள் குறித்து ஒத்திவைப்பு தீர்மானமோ, கவன ஈர்ப்பு தீர்மானமோ கொடுத்து உறுப்பினர்கள் விவாகித்து அமைசர்களோ, முதல்வரோ அது குறித்து பதில் அளித்த பின்னர் அந்த கூட்ட தொடர் முழுவது அந்த பொருள் குறித்து, எடுப்பதற்கு விதியில் இடம் இல்லை.

இது தான் சபை விதி. சபையின் மாண்பை குறைப்பதே ஒரே நோக்கம் என்றார். மலிவான விளம்பரத்தை அதிமுக தேடி அலைவதாக அவை முன்னவர் துரை முருகன் குற்றச்சாட்டை முன்வைத்தார். பேரவை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் அதிமுக உறுப்பினர்களை தற்காலிக இடைநீக்கம் செய்ய வேண்டும் என அவை முன்னவர் தீர்மானம் கொண்டுவந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட தொடர் முடியும் வரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்து உறுப்பினர்களும் பேரவை பணிகளில் கலந்து கொள்ள கூடாது என்று சபா நாயகர் தெரிவித்தார்.

Tags:    

Similar News