தைப் பொங்கல்: திருச்செந்தூரில் பக்தர்கள் வழிபாடு

தைப் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூா் கோயிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

Update: 2024-01-16 04:57 GMT

பக்தர்கள் தரிசனம் 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை 1-ஆம் தேதி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். தைப் பொங்கலை முன்னிட்டு, நேற்று (ஜன.15) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தா்கள் வசதிக்காக பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தா்களுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
Tags:    

Similar News