திருத்தணியில்கோலமிட்டபெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
திருத்தணியில் வீட்டின் முன் கோலமிட்டபெண்ணிடம் தாலி சங்கிலி பறித்து ஓட்டம் பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் திருத்தணி பேருந்து நிலையத்தில் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சங்கர் மனைவி கிருஷ்ணவேணி தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டு இருந்த போது அவ்வழியாக நடந்து வந்த வாலிபர் நோட்டமிட்டு கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலி பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததை கண்டு கிருஷ்ணவேணி கூச்சலிட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் துரத்திப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வீட்டின் முன்பு கோலம் போட்டு இருந்த போது பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்து ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.