ராயன் திரைப்படத்தின் பின்னணி இசை நிறைவு.

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் பின்னணி இசை நிறைவு பெற்றுள்ளதாக நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-29 06:00 GMT

பின்னணி இசை அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் 

தனுஷ் ராயன் என்ற படத்தை இயக்கி அதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் ராயன் படத்துடைய பின்னணி இசை நிறைவு பெற்றுள்ளதாக தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை ஜூன் மாதம் 13ம் தேதி வெளியிடப்பட குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் போஸ்ட் புரொடக்ஷன் தாமதம் ஆகுவதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News