பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளர் துணிச்சல் நடவடிக்கை வாட்ஸ் அப்பில் வைரல்
காரைக்கால் பெங்களூர் ரயிலில் பட்டிமன்ற பெண் பேச்சாளரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை ரயிலை நிறுத்தி போலீசில் ஒப்படைத்த யோகதர்ஷினியின் துணிச்சலான செயல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
Update: 2024-02-21 10:35 GMT
காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை வழியாக பெங்களூர் செல்லும் ரயிலில் பட்டிமன்ற பேச்சாளர் இளம்பெண் யோக தர்ஷினி என்பவர் பட்டிமன்றத்தில் பேசுவதற்காக பிரயாணம் செய்துள்ளார். அப்போது ரயிலில் கூட்டம் இல்லாத நிலையில் எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த போதை ஆசாமி ஒருவர் தவறான செய்கைகளை காட்டியுள்ளார். அது மட்டுமின்றி பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அநாகரீகமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அபாய யோக தர்ஷினி சங்கலியை பிடித்து இழுத்து ரயலை நிறுத்தியதாக கூறப்படுகிறது. அங்கே பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல்துறையைச் சார்ந்த உதவி ஆய்வாளர் சாமிநாதன் என்பவரிடம் யோக தர்ஷினி புகார் தெரிவித்தார். சாமிநாதன் மற்றும் சக பயணிகள் அந்த போதை ஆசாமியை பிடித்து நெய்வேலியில் உள்ள ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வாட்ஸ் அப் வீடியோவில் பேசியுள்ள பட்டிமன்ற பேச்சாளர் இதுபோல் ரயிலில் தவறாக ஈடுபடும் நபர்களை குறித்து துணியுடன் புகார் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.