விபத்தில் சிறுவன் பலி
சென்னை மணலி பகுதியில் விபத்தில் நான்கு வயது சிறுவன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-09 10:59 GMT
பலியான சிறுவன்
சேகர் மற்றும் பூங்கோதை தம்பதியினர் இன்று திருமண நாளை கொண்டாட தங்களது 4 வயது மகனுடன் பைக்கில் சென்றனர். அப்போது மணலி அருகே லாரி மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். காயமடைந்த தம்பதியினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் ஸ்ரீதர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.