மதிமுக பம்பரம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை.
மதிமுக-வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு.
Update: 2024-03-26 16:16 GMT
வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி மதிமுக பொதுசெயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில், பம்பரம் சின்னம் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் பட்டியலில் உள்ளதா இல்லை பொதுசின்னங்கள் பட்டியலில் உள்ளதா? இன்று மாலை 3 மணிக்குள் சின்னங்கள் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. வழக்கை மதியம் மூன்று மணிக்கு ஒத்தி வைத்தனர். ஒரு தொகுதிக்கு மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டால் மட்டுமே கட்சிகள் கேட்கும் சின்னங்களை ஒதுக்க முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டுமே ஒதுக்குவார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் வழக்கு விசாரணையின் போது, பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை என்பதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இந்த நிலையில், மதிமுக-வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.