நடமாடும் வாகனங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் நான்கு நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-09 07:40 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்களின் செயல்பாட்டினை துவக்கி வைத்தார். நவீன தொழில்நுட்பங்களை கொண்டு உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை காவல் அதிகாரிகள் திறம்பட கையாளுவதற்காக மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கல் (MPF) திட்டத்தின் கீழ் மெகா சிட்டி திட்டம் ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 1,030 இடங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் நிறுவப்பட்ட 3090 AI ஆல் இயங்கும் CCTV கேமராக்கள், 753 வாகன கண்காணிப்பு சாதனங்கள், 7 வான்வழி கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் 7 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் நகரம் முழுவதும் விரிவான கண்காணிப்பு உறுதி செய்யப்படுகிறது. முதல் கட்டத்தில், 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்கள் நகர கண்காணிப்புக்காக பயன்படுத்த தயாராக உள்ளது. மேலும் 2,250 கேமராக்கள் மற்றும் 650 வாகனங்கள் நிகழ்நேர கண்காணிப்பிற்காக தானியங்கி வாகன இருப்பிட அமைப்புடன் (AVLS) நிறுவப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா,காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால்,சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News