திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டிடங்களை கணோலி மூலம் திறந்த முதல்வர்
திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் 18 கோடியே 20லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தலைமை செயலகத்தில் கணோலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-05 08:53 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை சார்பில் 18 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மை செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் , தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் விசுவநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.