வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு கருத்து கேட்ட முதலமைச்சர்
வீடியோ கால் வாயிலாக முதல்வர் தொடர்பு கொண்டு கருத்து கேட்டறிந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-16 10:16 GMT
கருத்து கேட்ட முதல்வர்
முதல்வரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் “நீங்கள் நலமா" என்ற திட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று (16.03.2024) முகாம் அலுவலகத்திலிருந்து பயனாளிகளை நேரடியாக வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் மோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.