அதிகாரிகள் பணி செய்வதை பார்வையிட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டையில் வெப் காஸ்டிங் மூலமாக வாக்குச்சாவடி மையங்கள் கண்காணிக்கப்படுவதை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
Update: 2024-04-18 16:58 GMT
தேர்தல் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெப் கேஸ்டிங் மூலமாக வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்கும் பணி நடப்பதை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் அரக்கோணம் தேர்தல் நடத்தும் அலுவலருமான வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ராணிப்பேட்டை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.