கொள்ளிடம் ஆற்றில் சாயும் நிலையில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள்!

Update: 2024-08-01 15:30 GMT

உயர் மின்னழுத்த கோபுரம்

கொள்ளிடம் ஆற்றுக்குள் உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் இருப்பதால் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க கண்காணிப்பு தீவிரம்.

கொள்ளிடம் ஆற்றில் 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் தடுப்பனையின் ஒரு பகுதியில் சுமார் 200 மீட்டர் வரை உடைந்துள்ளது.

இதில் தண்ணீர் அனைத்தும் வெளியே வந்து கொண்டிருக்கிறது. நேப்பியர் பாலத்தில் மணி அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக அதை பாதுகாக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தடுப்பணை கட்டப்பட்டது.

மேலும் கொள்ளிடம் பாலத்தின் அருகில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் யாரும் செல்லாமல் இருப்பதற்காக போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News