இலங்கைக்கு செல்ல தனித்தனியே மனு அளிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான மூவரும் தனியாக மனு தாக்கல் செய்தால் அவர்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2024-03-04 14:43 GMT

விடுதலை செய்யப்பட்டவர்கள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை விரைவாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

அதற்கு தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பக் கோரிய முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரின் விண்ணப்பம் உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது என்று பதில் அளித்தது. மூவரும் தங்களுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி இலங்கை தூதரகத்தை நாடினார்களா? என்பது குறித்து தெரியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில்,

மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News