சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

Update: 2023-12-23 06:47 GMT

 குற்றவாளிகள் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கடந்த மே மாதம், சக்திவேல் என்பவரை 2 பேர் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 46 மணி நேரத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கடலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

Similar News