கள்ளச்சாராய உயிரிழப்பு.. நேரில் சென்ற அமைச்சர் உதயநிதி..!

Update: 2024-06-20 11:37 GMT

உதயநிதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளச்சாராயத்தால் உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை பார்த்துவிட்டு மருத்துவர்களிடம் அவர்கள் உடல்நிலை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டார். சட்டசபையின் இன்றைய நிகழ்வில் பங்கேற்ற பின்னர் கள்ளக்குறிச்சிக்கு சென்றார் உதயநிதி ஸ்டாலின். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர்.

Advertisement

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர். கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.


Tags:    

Similar News