தேர்தல் முடிவுகள் செல்லாது.. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு !

Update: 2024-07-18 09:17 GMT

 ஓ.பன்னீர்செல்வம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப்பெற்றது. வெற்றி குறித்து ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் எனில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, இன்று (ஜூலை 18) ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்., வேட்பாளர் நவாஸ்கனியின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், “ராமநாதபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட நவாஸ் கனி சொத்துக் கணக்கை முறையாக காண்பிக்கவில்லை. ஆகவே, நவாஸ் கனி வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பிரிந்து கிடக்கும் அதிமுக இணைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதிமுகவை இணைத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கவில்லை; சசிகலா பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறினார்.

Tags:    

Similar News