ஒட்டுமொத்த வியாபாரிகளையே நிதியமைச்சர் அவமான படுத்தியுள்ளார்: கருணாஸ்

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வியாபாரிகளையே நிதியமைச்சர் அவமானப்படுத்தியுள்ளதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-14 10:18 GMT

 கருணாஸ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ், நான் நாட்டிற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறேன். நான் உட்பட பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரி நாட்டு மக்களின் நலன்களுக்கு செலவிடப்படுவதில்லை. மக்களிடம் இருந்து பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியில் இருந்து அம்பானி, அதானி போன்றவர்களை வளர்த்துவிடுவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும். அன்னபூர்ணா முதலாளி சராசரி குடும்பத்தில் பிறந்து உழைத்து இந்த முன்னேறியுள்ளார்.நிதியமைச்சரிடம் அவர் பன்னுக்கு வரி இல்லை அதில் தடவுகிற ஜாமுக்கு 18% வரி போடுகிறீர்கள். இனிப்புக்கு ஒரு வரி காரத்துக்கு ஒரு வரி என குழப்பங்கள் இருப்பதாக கேட்கிறார். அவரை அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர். இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News