ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட 'மாபெரும் துரோகம்' - பட்ஜெட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Update: 2024-07-24 06:00 GMT

Stalin

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட 'மாபெரும் துரோகம்' என பட்ஜெட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை

* பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.

* மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக,

* நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் அமைந்துள்ளது.

* இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க நிவாரணமாக 37,000 கோடி ரூபாய் கேட்டும்,

* ஒன்றிய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது.

* உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மற்றும் பீகார் மாநிலத்திற்கு 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது.

* இது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்.

* 2 ஆம்கட்ட சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டும் எந்தவொரு நிதியும் இதுவரை வழங்கவில்லை.

* கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

* தமிழ்நாட்டிற்கென எந்தவொரு புதிய இரயில் திட்டங்களோ, நெடுஞ்சாலைத் திட்டங்களோ இடம் பெறவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

* மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.'' என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News