கல்விச் செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின் !
Update: 2024-06-21 11:20 GMT
மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது, ''பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரை அவர்களது கல்விச் செலவை அரசே ஏற்கும்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும்
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்
பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்'' என தெரிவித்துள்ளார்.