முதன்மை கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்கும் - ஸ்டாலின்

Update: 2024-08-02 14:00 GMT

ஸ்டாலின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாட்டின் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்குவதாகவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (02.08.2024) காலை 10.30 மணியளவில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளைப் பாராட்டிச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," அண்ணாவின் பெயர் கொண்ட இந்த நூலகத்தில் தமிழ்நாட்டின் அறிவு கண்களான மாணவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர்

தமிழக மாணவர்களின் அறிவாற்றல் தேசத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே பெருமை. ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மனதார வாழ்த்துகிறேன். உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் தான் இந்தியாவிலேயே நம்பர் ௧.

புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளது. அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் முதன்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்கின்றனர்.

முதன்மை கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்கும். வெளிநாடுகளில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் முதல் பயண செலவை அரசு ஏற்கும்.

தமிழக அரசின் பிரதிநிதிகளாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.'' என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News