ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏஜெண்டாக இருந்துவருகிறார் ஆளுநர் - துரை வைகோ காட்டம்

ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுவது வெட்கக்கேடானது எனவும்,ஆர்.எஸ்.எஸ் சிற்கு துணை போகும் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் இருந்து வருவதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

Update: 2023-10-28 01:26 GMT

துரை வைகோ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட மதிமுக முதன்மை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் . வன்முறை எந்த விதத்தில் நடைபெற்றாலும் அதை அனுமதிக்க கூடாது. அரசியல் சாசனப்படி ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும்.நாளும் பொழுதும் தமிழக அரசை குறை கூறி வருகிறார். சமீபத்தில் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை இல்லை என ஆளுநர் குற்றம் சாட்டினார். தமிழக அரசு அரசு மரியாதை செலுத்தி வருகிறது.தமிழ்நாட்டில் விடுதலை போராட்ட வீரர்களுக்கு தமிழக அரசு உரிய அங்கீகாரம் கொடுத்து வருகிறது என்றும். விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி கூறுவதற்கு ஆளுநருக்கு எந்த அருகதையும் கிடையாது எனவும் கூறினார்.தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்றது நாதுராம் கோட்சே. அந்த கோட்சேவிற்கு கொடி பிடிக்கின்ற இயக்கங்கள் வலதுசாரி இயக்கங்கள். RSS ற்கு துணை போகும் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் இருக்கிறார். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு பாஜக நாடகம் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு இருக்கலாம் என தெரிவித்தார். பாஜக ஒன்றிய அமைச்சர் எல். முருகன் தமிழக அரசை குறை கூறவில்லை என்றால் அவரது அமைச்சர் பதவி பிடுங்கப்படும். தொடர்ந்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் நபராகத்தான் ஆளுநர் இருந்து வருகிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் இது போல் தான் நடந்து வருகிறார்கள். இதற்கு பின்னால் ஒன்றிய அரசு உள்ளது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுவது ஒரு வெட்கக்கேடானது. பாடப்புத்தகத்தில் இந்தியாவின் பாரத் என மாற்றுவதற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது.வட மாநிலத்தில் பாரத் என கூறுகிறார்கள் நமது தமிழகத்தில் இந்தியா என கூறுகிறோம். ஜாதி மதத்தை வைத்து இயங்கும் இயக்கங்கள் அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். திமுக கூட்டணி சுக்கு நூறாக உடையும் என முதலமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய கருத்தை சீரியஸா எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் நல்ல மனிதர் தான் என தெரிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி உடைந்ததற்கும் திமுக கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். ராகுல் காந்தி பிரதமராக வருவார். நான் போட்டியிட வேண்டுமென விருதுநகர், திருச்சி , அதிமுக நிர்வாகிகள் ஆசைப்படுகிறார்கள்.கட்சியின் கட்டளைக்கு கட்டுப்படுவேன். நான் போட்டியிட வேண்டுமா என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News