விபத்தில் தலைமை காவலர் படுகாயம்
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இரவு ரோந்து பணியின்போது சாலை விபத்தில் தலைமை காவலருக்கு படுகாயம் ஏற்பட்டது.;
Update: 2024-03-30 08:56 GMT
தலைமை காவலர் படுகாயம்
வேலூர் மாவட்டம் ,அரியூர் கிருபா நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரி கார்த்திக் (வயது 40). வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார். இவர் தனது டூவீலரில் இரவு நேர ரோந்து சென்றார். கிரீன் சர்க்கிளில் பகுதியில் கொண்டிருந்த போது பின்னால் வந்த ஸ்கூட்டி , டூவீலர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஹரி கார்த்திக்கிற்கு கை, கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து அவர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.