டான்ஜெட்கோவிற்கு எதிரான உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.
டான்ஜெட்கோவுக்கு எதிரான தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னையை அடுத்த மணலி பகுதியில் எண்ணூர் மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்கள், நான்கு பெட்ரோலிய மற்றும் உர நிறுவனங்களால் மாசு என பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழக்கில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. டான்ஜெட்கோ ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது.
பொது சேவை நிறுவனம் என்பதால் 1 சதவீதம் என்கிற ரூ. 800 கோடி செலுத்துவது சாத்தியமில்லாதது என்று மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதம் செய்தார். நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, இரு அனல் மின் நிலையங்களையும் பராமரிக்க வேண்டிய நிலை நிலவுவதால், அபராதம் செலுத்துவது என்பது கூடுதல் சுமை என்றும் தெரிவித்தார். முறையான நடைமுறைகள பின்பற்றி இழப்பீட்டை நிர்ணயிக்கும்படி தீர்பாயத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணலி பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுசூழல் பாதிப்பை சரி செய்யும் வகையில் மணலி சுற்றுசூழல் பாதுகாப்பு நிதியத்திற்கு ஓராண்டு விற்றமுதலில் ஒரு சதவீதத்தை செலுத்த வேண்டுமென டான்ஜெட்கோ-விற்கு பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.