நெல்லை நீதிமன்ற வாசலில் ஒருவர் வெட்டிக் கொலை; போலீஸ் விசாரணை!!

நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-12-20 08:00 GMT

கொலை

நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கும்பல் அவரது முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. ஊராட்சி மன்ற துணை தலைவர் கொலை வழக்கில் ஆஜராக சென்ற போது மாயாண்டியை நான்கு பேர் கொண்ட கும்பல் மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் வைத்தே வெட்டிக் கொன்றது. இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற வாசலில் கொலை நடைபெற்ற நிலையில் காவலர்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கொலை சம்பவம் அரங்கேறியதை அடுத்து நீதிமன்றம் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்றும், வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கொலை செய்த கும்பலோடு வந்ததாக போலீசார் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News