கொஞ்சமும் கூச்சமின்றி எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார் - மேயர் பிரியா கண்டனம்!

Update: 2024-07-20 10:20 GMT

 மேயர் பிரியா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த ஆய்வை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஏழை, எளியவர்களின் அன்னலட்சுமியாக திகழ்ந்த அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்து, தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.

Advertisement

இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது எக்ஸ் தளத்தில், திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அம்மா உணவங்களை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. முதலமைச்சர் அவர்களின் அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை. திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்.” என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News