வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
திமிரி ஒன்றியத்தில் ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்ட பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள விளாப்பாக்கம் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல் நிலைப்பள்ளியில் 6 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியை 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை மற்றும் கழிவறை கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கைத்தறி மற்றும் துணினூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துக் கொண்டு வகுப்பறை கட்டிடம் பணிக்கும் பூமி பூஜைபோட்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையம், கணியனூர், டி புதூர், அகரம் பென்னகர் ஆகிய பகுதிகளில் இரண்டு ஊராட்சி மன்ற கட்டிடம், சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 உடற்பயிற்சி கூடம், இரண்டு கலையரங்கம், 3 அங்கன்வாடி, பால் கூட்டுறவு சங்க கட்டடம் என மொத்தமாக ரூ.2 கோடியை 11 லட்சம் மதிப்பிலான 13 முடிவுற்ற பணிகளை அமைசார் ஆர் காந்தி திறந்து வைத்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இந்த நிகழ்ச்சியில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன், மாவட்ட திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, திமிதி ஒன்றிய குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகர், சரவணன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாளையம் அமுதா சேகர், கணியனூர் துணை தலைவர் சிவக்குமார், டி புதூர் கோகுல், அகரம் மலர் மணி, பென்னகர் லதா வெங்கடேசன், வேம்பி குமாரி கலைமணி, உடபட பலர் கலந்துக் கொண்டனர்.