நீலகிரி மாவட்டம் கிருஸ்துவ மாவட்டமாக மாறி வருகிறது
நீலகிரி மாவட்டத்தை கிருஸ்துவ மாவட்டமாக மாற்ற முயற்சி நடக்கிறது என இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் ஊட்டியில் பேட்டியளித்தார்.
இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் சில கிருஸ்துவ அமைப்புகள் காட்டு நாயக்கர் பழங்குடிகள் 100 பேரை கிருஸ்துவ மதத்திற்கு மாற்றியிருக்கிறார் பிரேயர் மற்றும் சிறப்பு ஆராதனை, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வந்தால் மாணவர்களுக்கு டியூசன், மற்றும் வீடு கட்டி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி மதம் மாற்றுகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் பழங்குடிகள் பழமை பாரம்பரியத்துடன் வாழ்த்து வருகிறார்கள். தோடர், கோத்தர், படகர் இன மக்கள் இருக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தை கிருஸ்துவ மாவட்டமாக மாற்ற முயற்சி நடக்கிறது. இதனால் இங்கு மத மோதல் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்ட பழமை, பழக்க வழக்கம் மாறிவிடும். படகர் இன மக்கள் சிலர் கிருஸ்தவர்களாக மாற்றியிருக்கிறார்கள். அவர்கள் கிருத்துவ பாடல்களை படக மொழியில் ஒலிபரப்புகிறார்கள்.
இப்படி மதம் மாறினால் அதே இனத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு போவதில் பிரச்சனை ஏற்படுகிறது அதேப்போல சுடுகாட்டு பிரச்சனையும் வருகிறது. அரசாங்கம் உடனடியாக மதம் மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு போராட்டம் நடத்தும். ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் உயர் நீதிமன்ற உத்தரவு படி இ-பாஸ் வழங்கப்படுகிறது. நாம் வெளிநாட்டில் இல்லை இ-பாஸ் பிரச்சனையால் வியாபாரிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இங்கு இருக்கும் சுற்றுலாத் துறை அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பங்களாதேஷ் காரர்கள் போலியான ஆதார் கார்டு வைத்து ஊடுருவி இருக்கிறார்கள் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். மேலும் போதை பொருட்களும் அதிகம் புழக்கதில் உள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து போதை பழக்கத்தை கட்டு படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.