"ஒரு வாரத்தில் கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்படும்..." - புஸ்ஸி ஆனந்த்

Update: 2024-07-19 05:17 GMT

புஸ்ஸி ஆனந்த்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று (ஜூலை 18) தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தவெக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர். அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த் இன்னும் ஒரு வாரத்தில் கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்படும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதற்கிடையில், விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக தன்னுடைய 69-வது படத்தில் நடிக்க தயாராகி கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Tags:    

Similar News