விபத்தில் காயம்மடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

விபத்தில் காயம்மடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானர்.;

Update: 2023-12-03 11:41 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெங்களூருவைச் சேர்ந்தவர் மாதேஷ், இவரது நண்பர் சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் சரவணன், 38; இருவரும் கடந்த 24ம் தேதி கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி பைக்கில் சென்றனர். சரவணன் பைக்கினை ஓட்டினார்.

சின்னசேலம் அடுத்த மரவானத்தம்‌ மேம்பாலம் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி, சரவணன் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இருவரும் படுகாயமடைந்தனர். சேலம் அரசு‌ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சரவணன் நேற்று இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News