தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு!
Update: 2024-08-09 09:00 GMT
தங்கம் விலை
நேற்று ஆகஸ்ட் 8-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.160 அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 9-ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.75 அதிகரித்து ரூ.6425க்கும் சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.51,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.61 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5263க்கும், சவரனுக்கு ரூ.488 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42104 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.88-க்கும் ஒரு கிலோ ரூ.88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.